Tribes in Tamilnadu

இந்தியாவில் பழங்குடியின மக்கள்
உலக அளவில் உள்ள பழங்குடி மக்கள் சுமார் 50 கோடி பேர். இது உலக மக்கள்தொகையில் 7.5 சதவிகிதம் ஆகும். உலக அளவில் உள்ள பழங்குடி மக்களில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் அதிகமான பழங்குடி இனத்து மக்கள் இந்தியாவில் உள்ளனர். பழங்குடி இனத்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஆப்ரிக்க நாடுகளை அடுத்து உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில், மைய அரசின் பண்பாட்டு அமைச்ககத்தின் கீழுள்ள மானிடவியல் ஆய்வு அமைப்பின் கணக்குப்படி 461 ஆதிவாசி இன மக்கள் இருப்பதாகவும், 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 477 ஆதிவாசி இனமக்கள் இருப்பதாவும், மைய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் 622 அட்டவணை பழங்குடியினர் இருப்பதாகவும் கூறுகிறது.நதிக்கரையோர நாகரிகம் இந்தியாவில் செழிப்பாக இருந்தபோதே நகரங்களை அடுத்து மக்கள் கிராமங்களிலும் மூன்றாவதாக நாடோடிகளாய் வனங்களிலும், மலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்துவந்துள்ளனர். அவ்வாறு வனங்களிலும் மலைகளிலும் வாழ்ந்த மக்களே பழங்குடி இனத்தவர்கள். இவர்களில் 75 பழங்குடி இனத்தவர்கள் முதுபழங்குடியினர் அல்லது தொல்பழங்குடியினர் (Aboriginal tribes / Primitive tribes) என்று மைய அரசு அங்கீகரித்துள்ளது. 13 இந்தியர்களில் ஒருவர் பழங்குடி இனத்தவர். இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் உள்பட பழங்குடி இனத்தவர் பரவி வாழ்ந்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 8.43 கோடி மக்கள் (சுமார் 8.2 சதவிகிதம்) பழங்குடி இனத்தவர்கள் ஆவார்கள்.இந்திய பழங்குடி மக்கள் இந்தியாவில் சுமார் 15 சதவீத நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் பல்வேறு உயிர்ச்சூழலில் குறிப்பாக உயர்ந்த மலைப்பகுதிகளில், மேற்கு மலைத்தொடர், கிழக்குமலைத்தொடர், மத்திய பீடபூமி பகுதிகள் மற்றும் வடகிழக்கு இமயமலைப் பகுதிகள் என பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சில இனத்தவர்களே சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.இந்தியாவில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை பூகோளரீதியாக 7 வகையாகப் பிரித்துள்ளனர். அவை கீழ்வருமாறு:
மத்திய-தென் பகுதி (தண்டகாருண்யா பகுதி),
மத்திய- வடக்குப் பகுதி (ஹசாரிபாக், மைக்கல் பகுதி),
மேற்குப் பகுதி (ஆரவல்லி-சகாயாத்ரி பகுதி),
வடகிழக்குப் பகுதி,
வடமேற்குப் பகுதி,
தென்பகுதி மற்றும்
கடலோரப்பகுதி.
மொழி வளர்ச்சி ரீதியில் இந்தியப் பழங்குடிகள் 3 வகைப்படுவர். அவர்கள்
வடக்கில் திபேத் – சீனா குடும்ப மொழி பேசும் பழங்குடிகள்,
மத்திய இந்தியாவில் ஆஸ்திரோ ஆசிய மொழி பேசுவோர்,
தென் பகுதிகளில் திராவிட மொழிக் குடும்பப் பழங்குடிகள்.
இனவகை ரீதியில் வடக்கில் மங்கோலிய, மத்தியில் ஆஸ்திரலாயிட், தெற்கே நீக்ரோ இன வகையினர் இருப்பதாக டாக்டர் பி.எஸ். குஹா கூறுகிறார்.
இந்த பழங்குடியினர் பல்வேறு உயிர்சூழல், புவி தட்பவெப்ப நிலைக்கேற்ப இந்தியா முழுவதுமாக பல்வேறு கலாச்சார பண்பாட்டுச் சூழலில் சமூக பொருளாதார பின்னணிக்கேற்ப பரந்துபட்டு வாழ்ந்துவருகின்றனர். தங்களுக்கெனத் தனி பண்பாட்டுடனும், கலாச்சாரமும் கொண்டு தனித்தனி இனக்குழுக்களாக வழிபாட்டுமுறைகளையும் மரபுகளையும் சடங்குகளையும், மருத்துவ முறைகளையும் விவசாயத் தொழில்நுட்பங்களையும் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர். பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையானது பெரிதும் வனங்களையே சார்ந்துள்ளது. காடுகளிலிருந்து உணவு, எரிபொருள், கட்டுமானப்பொருட்கள், மூலிகைகள் முதலானவற்றை பெற்றே வாழ்கின்றனர். காடுகளைச் சார்ந்தே இவர்களது பொருளாதாரமும் இருக்கிறது.
ஒவ்வொரு பகுதியில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் தங்களுக்கெனத் தனித்துவமும் குணாதிசயங்களும், சமூக மதிப்புகள், கலாச்சார கட்டமைப்புகள், வாழும் முறைகள் போன்றவைகளால் ஏனைய மக்களிடமிருந்து வேறுபட்டு வாழ்ந்து வருபவர்களாய் உள்ளனர்.

இந்தியாவில் பழங்குடியினர் மொத்த எண்ணிக்கை*:
வ.எண் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பழங்குடியினர் எண்ணிக்கை
1. ஆந்திரபிரதேசம் 33
2. அருணாசல பிரதேசம் 12
3. அஸ்ஸாம் 14
4. பீஹார் 30
5. கோவா 5
6. குஜராத் 29
7. ஹிமாச்சல்பிரதேசம் 8
8. ஜம்மு & காஷ்மீர் 8
9. கர்நாடகம் 49
10. கேரளா 35
11. மத்தியபிரதேசம் 46
12. மகாராஷ்ட்ரா 47
13. மணிப்பூர் 29
14. மேகாலயா 17
15. மிஜோரம் 14
16. நாகாலாந்து 5
17. ஓடிஸ்ஸா 62
18. ராஜஸ்தான் 12
19. சிக்கிம் 2
20. தமிழ்நாடு 36
21. திரிபுரா 19
22. உத்திரபிரதேசம் 5
23. மேற்கு வங்கம் 38
யூனியன் பிரதேசங்கள்
1. அந்தமான் & நிக்கோபார் 6
2. தாத்ரா & நாகர் ஹாவேலி 7
3. டையூ &; டாமன் 5
4. லக்க்ஷதீவு **
** லக்க்ஷதீவில் குடியிருப்பவர்கள் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பெற்றோர்கள் பழங்குடி இனத்தவர்களாகக் கருதப்படுவர்.
* ஆதாரம்: இந்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஆண்டறிக்கை

தமிழ்நாட்டில் பழங்குடியின மக்கள்
தமிழ்நாடு, இந்திய அளவில் வாழும் பழங்குடியினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் 16வது இடத்தில் இருக்கிறது (சுமார் 0.85%). தமிழ்நாட்டில் ஏறத்தாழ 18 மாவட்டங்களில் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், கன்யாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர்) பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் மலைகளிலும் ஒருசிலர் சமவெளிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்த வரையறுக்கப்பட்ட பழங்குடியினரின் (Scheduled Tribes)எண்ணிக்கை 36. அவை: 1. அதியன் 2. அரநாடன், 3. இருளர், 4. ஊராளி 5. எரவல்லன் 6. கணியன் 7. கம்மாரா 8. காட்டுநாயக்கன் 9. காடர் 10. காணிக்காரன் 11. குடியர் 12. குறிச்சன் 13. குறும்பர் 14. குறுமன் 15. கொச்சுவேலன் 16. கொண்டகாபு 17.கொண்டாரெட்டி 18. கொரகர் 19. கோத்தர் 20. சோளகர் 21. தொதவர் 22. பள்ளியன் 23. பள்ளேயன் 24. பளியர் 25. பணியன் 26. மகாமலசர் 27. மலசர் 28. மலை அரையன் 29. மலைக்குறவன் 30. மலைப் பண்டாரம் 31. மலையக்கண்டி 32. மலையாளி 33. மலை வேடன் 34. மன்னான் 35. முதுவன் 36. முடுவன்.
இந்திய அரசு தமிழ் நாட்டில் உள்ள 36 பழங்குடி இனத்தவர்களில் 1. தொதுவர் 2. காடர் 3. குறும்பர் 4. இருளர், 5. பணியன் 6. காட்டுநாயக்கன் ஆகிய 6 பழங்குடி இனத்தவர்களை தொல்பழங்குடி இனத்தவர்கள் (Primitive Tribes) என்று அங்கீகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரையறுக்கப்பட்ட பழங்குடியினர் 1981 ஆம் ஆண்டு சுமார் 5,20,000 பேர். (இது மொத்த மக்கள்தொகையில் 1.07% ஆகும்). இம்மக்கள் தொகை 1991 ஆம் ஆண்டு 5,74,000 ஆக உயர்ந்து தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 1.03% ஆக குறைந்தது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெண்டுப்பின்படி 6,51,321 பேர் பழங்குடி இனத்தவர்கள். (மொத்த மக்கள் தொகையில் சுமார் 1.024% ஆகும்). இவர்கள் தமிழ்நாட்டில் சுமார் 3,834 கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் சேர்வராயன், கல்வராயன், கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏலகிரி, பச்சமலை, சித்தேரி, பாலமலை போன்ற மலைகளில் வாழும் மலையாளி, இதன் சமவெளிப்பரப்பில் வாழும் இருளர், சோளகர், குறிச்சான், குருமன், கொண்டாரெட்டி மற்றும் ஊராளி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில், நீலகிரி மலைப்பகுதிகளில் பணியர், தோடர், குறும்பர் ,கோதர், இருளர், சோளகர், ஊராளி, படுகர் முதலான பழங்குடியினரும், ஆனைமலை, பழனி மலைப்பகுதிகளில் குண்ணுவர், காணிக்காரர், காடர், புலையர், மலைவேடர், மலசர், மன்னான், முதுவர் போன்ற பழங்குடியினர் வசித்துவருகின்றனர்.

தமிழ் நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மலைவாழ்மக்கள்
இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 60 பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் வடபகுதியில் (ஓடிஸ்ஸாவின் மகாநதி பள்ளத்தாக்கு, சட்டீஸ்கர், மத்தியப்பிரதேச மாநிலங்கள், ஆந்திரபிரதேசத்தின் பள்ளத்தாக்கு வரை) சுமார் 1.76 கோடி பழங்குடி மக்களும், தென்பகுதியில் (கிருஷ்ணா நதிப் பள்ளத்தாக்கிலிருந்து நீலகிரி மலைத்தொடர் வரை) சுமார் 20 லட்சம் பழங்குடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும், அதன் அடிவாரம் மற்றும் சமவெளிப் பகுதிகளிலும் 7 பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள்: 1. மலையாளி 2. கொண்டாரெட்டி, 3. குறிச்சான், 4. குறுமன் 5. சோளகர் 6. ஊராளி
7. இருளர்

தமிழ் நாட்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மலைவாழ்மக்கள் (மலையாளிகள்)

வ.
எண் மாவட்டமும் மலைகளும் மொத்த பழங்குடி மக்கள்தொகை* % மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகையில்
1 விழுப்புரம் – பெரிய கல்வராயன் 63920 2.16
2 வேலூர் – ஏலகிரி மலை 63040 1.81
3 திருவண்ணாமலை-ஜவ்வாது மலை 72760 3.33
4 சேலம்- சின்ன கல்வராயன்,
சேர்வராயன் மலை, பச்சமலை 103921 3.45
5 நாமக்கல் – கொல்லிமலை 51416 3.44
6 தருமபுரி – சித்தேரி மலை 59549 2.08
7 திருச்சி – பச்சமலை 18912 0.78
8 பெரம்பலூர் – பச்சமலை 3307 0.67
9 திண்டுக்கல் – சிறுமலை 6484 0.34
* 2001 மக்கள் தொகை கணக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s